இந்தூர்:
என்று தீரும் இந்த பிரச்னை... இதற்கு எப்பொழுதான் முடிவு ஏற்படும் என்று மக்கள் மிகுந்த வேதனைப்படும் அளவில் இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது என்று தான் கூற வேண்டும். என்ன விஷயம் தெரியுங்களா?


மத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்தாக முஸ்லீம் பெண்கள் 2 பேரை இந்து அமைப்பை சேர்ந்து பெண்கள் அடித்து துவைத்ததுதான் காரணம்.


மத்தியப் பிரதேச மாநிலம், மந்த்சாவூர் நகர் ரயில் நிலையத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த 2 முஸ்லிம் பெண்களை போலீசார் கைது செய்தனர். அப்போது இந்த விஷயம் அறிந்து அங்கு வந்த இந்து அமைப்பைச் சேர்ந்த பெண்கள் போலீசார் முன்னிலையிலேயே அந்த பெண்களை புரட்டி எடுத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


பின்னர் போலீசார் அந்த பெண்களை மீட்பதற்குள் படாதபாடு பட்டு விட்டனர். அந்தப் பெண்கள் இருவரும் 30 கிலோ மாட்டிறைச்சி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். 


இதுகுறித்து அம்மாநில உள்துறை அமைச்சர் கூறுகையில், “அந்த பெண்கள் வைத்திருந்தது எருமை மாட்டின் இறைச்சி என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெண்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் எருமை மாட்டு இறைச்சிக்கு தடையில்லை. ஆனால் அனுமதி பெற்று விற்பனை செய்ய வேண்டும். அந்த பெண்கள் அனுமதி சீட்டு வைத்திருக்கவில்லை என்பதால் கைது செய்யப்பட்டு  நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.



Find out more: