புதுடில்லி:
அங்கிருந்து விலகி இங்க வர்றாராம்... வர்றாராம்... இனி சிக்சர் மழைதான் என்று இந்த கட்சிக்காரங்கள் சந்தோஷமாக இருக்காங்களாம். யார் வர்றாங்க தெரியுங்களா?


பா.ஜனதா கட்சியில் இருந்து விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான சித்து வரும் ஆக.15ம் தேதி ஆம் ஆத்மி கட்சியில் ஜாயிண்ட் செய்ய போகிறார்ன்னு தகவல் வெளியாகியுள்ளது. நட்சத்திரம் ஒன்று தங்களுடன் ஐக்கியமாவதால் ஆம்ஆத்மி தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து பா.ஜனதா சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் டில்லி மேல்–சபைக்கு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏற்கனவே அவர் 2 முறை பாராளுமன்ற எம்.பி. ஆகவும் இருந்துள்ளார்.


ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் பா.ஜனதாவில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் இணையப் போவதாகவும் செய்திகள் பரபரத்தன. 


ஆனால் அமைதிக்கு மறுபெயர் சித்து என்பதுபோல் மவுனம் காத்து வந்தார் அவர். தற்போது வரும் ஆக.15-ல் ஆம் ஆத்மி கட்சியில் சித்து இணையவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. கட்சியில் இணைந்தவுடன் சித்துவை ஆம் ஆத்மி கட்சி சார்பில் பஞ்சாப் மாநில முதல்வர் அறிவிக்க மாட்டோம். பஞ்சாப் சட்டசபை தேர்தலில் நட்சத்திர பேச்சாளராக வலம் வருவார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பார்ப்போம். என்ன நடக்கிறது என்று. 


Find out more: