புளோரிடா:
என்ன மனது இது. பெற்ற மனதா... கல் மனதா... நெஞ்சத்தை கலங்க செய்யும் மிக மோசமான செயல் அமெரிக்காவில் நடந்துள்ளது.


அது இதுதான். அமெரிக்காவில் தற்போது துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதில் கொடுமையான ஒரு செயலும் நடந்துள்ளது ஒரு வயது குழந்தையை அதன் தந்தையே சுட்டுக்கொன்ற கொடூரம்தான் அது.


அமெரிக்காவில் டேனியா பீச் என்ற இடத்தை சேர்ந்தவர் திமோதிகோலி. இவர் தனது மனைவி மற்றும் 7 வயது மகன், ஒரு வயது பெண் குழந்தை ஆகியோருடன் கடற்கரைக்கு சென்றிருந்தார். அங்கு என்ன நடந்ததோ... கணவன் - மனைவி இடையே தகராறு.


இதில் ஆத்திரம் அடைந்த திமோதிகோலி துப்பாக்கியை எடுத்து தனது 2 குழந்தைகளையும் சுட்டார். இதில் அவர்கள் இருவர் மீதும் குண்டு பாய்ந்தது. பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழக்க, சிறுவனுக்கு காயம் மட்டும் ஏற்பட்டது.


பின்னர் திமோதிகோலி துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொட்டு இறந்தார். காயமடைந்த சிறுவன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். இச்சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. துப்பாக்கி கலாச்சாரம் என்று முடிவுக்கு வருமோ தெரியவில்லை.



Find out more: