சென்னை:
சதம்தான்... அதுவும் விரைவில் சதம்தான் போலுள்ளது. சென்னை விமானநிலையத்திற்குள் செல்லவே இனி அச்சம் ஏற்படும் என்றும் தோன்றுகிறது.
காரணம்... வழக்கம்போல்தான்... கண்ணாடி உடைந்து விழுந்து விபத்துதான். இதுவரை அரை சதத்தை தாண்டி 65 விபத்துக்களை சந்தித்த இந்த விமான நிலையம் தற்போது 66வது முறையாக மீண்டும் ஒரு கண்ணாடி உடைந்து விபத்தை சந்தித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தின் 15, 16வது நுழைவு வாயில் அருகே உள்ள 20 அடி உயர கண்ணாடி உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் யாரும் அதிர்ஷ்டவசமாக காயமடையவில்லை. இப்படி அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் பயணிகள் அச்சமடைகின்றனர்.