பிரசல்ஸ்:
பெல்ஜியத்தில் தாக்குதலுக்கு திட்டமிட்ட அண்ணன்-தம்பியை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில் உள்ள விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் கடந்த மார்ச் மாதம் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் உலகநாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலில் 32 பேர் பலியாகினர். 


இதை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. மேலும், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சந்தேகப்படும் நபர் மற்றும் இடங்களை தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 


இதன்படி மான்ஸ் பிராந்தியம் மற்றும் லீக் நகரில் உள்ள வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் நூரிதின் (33), அவரது சகோதரர் ஹம்சா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவர்கள் இருவரும் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. இந்த செய்தி மக்கள் மத்தயில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



Find out more: