பாட்னா:
பல்டி கேள்விப்பட்டு இருப்போம்... அந்தர் பல்டி கூட பார்த்து இருக்கலாம்... ஆனால் அரசியல்வாதிகள் அடிக்கும் பல்டியை எந்த வகையில் சேர்ப்பது என்றே தெரியலை. அதிலும் முதல்வரே அடித்த பல்டி... விஷயம் இதுதான்...


பீகாரில் மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்துவதில் விடாப்பிடியாக உள்ளார் முதல்வர் நிதிஷ்குமார். பாராட்ட வேண்டிய விஷயம். ஆனால் இந்த பிடிவாதத்தை கள்ளுக்காக சற்றே விலக்கி கொள்ள உள்ளாராம். ஏன் தெரியுங்களா?


பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதை மேலும் கடுமையாக்க மதுவிலக்கு அமல் சட்டத்தில் போடுறோம் புதிய விதிகள் என்று நேற்று முன்தினம் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்தார். அந்த விதிகள்படி, வீட்டில் மது வைத்திருந்தாலோ, அருந்தினாலோ குடும்பத்தினரும் சேர்ந்து சிறைக்கும் போகும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட உள்ளது.


இதற்கு எதிர்க்கட்சிகள் இல்லாம கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளமும் போர்க்கொடி தூக்கியது. தொடர்ந்து ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் கொடுத்த நெருக்கயால் கள் விற்பனைக்கு விலக்கு அளிக்கப்படும் என்று பீகார் அரசு நேற்று அறிவித்தது.


''கள், போதைப் பொருள் அல்ல; உடலுக்கு நலன் தரும் பானம் என்பதால் அதற்கு விலக்கு அளிக்கப்படுகிறது,'' என்று அடிச்சிருக்கார் பாருங்க ஒரு அகாய பல்டியை அம்மாநில ஆயத்தீர்வை துறை அமைச்சர் அப்துல் ஜலில்.


இவர்தான் 'கள் விற்பனையை அனுமதிக்க முடியாது' என்று கடுமையாக கூறியிருந்தார். இப்போது இப்படி அடித்துள்ளார் பல்டி. இதற்கு பின்னணியில் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Find out more: