குஜராத்:
இந்த அரசியல்வாதிகள் எதை செய்தாலும் அதுக்கு பின்னாடி பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அப்படித்தான் உள்ளது குஜராத்திலும்.
குஜராத் மாநிலத்தில் கார் உட்பட சிறு வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்து அறிவித்துள்ளது அம்மாநில அரசு.
இந்த உத்தவரவு ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. இதற்கான உத்தரவை முதல்வர் ஆனந்தி பென் பட்டேல் பிறப்பித்துள்ளார். இதுக்கு பின்னாடி பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. என்ன தெரியுங்களா? குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
ஆனந்தி பென் பட்டேல்
இதனால் வாக்காளர்களை கவருவதற்காக இந்த திட்டத்தை அறிவித்து இருப்பதாக விபரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இப்ப நீக்கி விட்டு பின்னாடி ஒரேடியாக அள்ளாம இருந்தா சரி...