காபுல்:
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கொலை செய்யும் நோக்கத்துடன் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை பாதுகபாப்பு படையினர் முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலில் வெளிநாட்டினர் தங்கும் ஓட்டலை குறிவைத்து வெடிகுண்டுகள் நிரப்பிய லாரியால் தலிபான் தீவிரவாதிகள் ஆவேச தாக்குதல் நடத்த பாதுகாப்பு படையினரின் நடத்திய எதிர்தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சர்வதேச விமான நிலையம் மற்றும் ராணுவ தளம் அருகே வெளிநாடுகளை சேர்ந்த காண்டிராக்டர்கள் தங்கியுள்ளனர். சுற்றுலாப்பயணிகளும் இந்த ஓட்டலில் தங்குவது வழக்கம். இந்த ஓட்டல் மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். 


இந்த ஓட்டலின் வடக்கு பகுதியில் உள்ள ‘கேட்’ மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் நிரப்பிய லாரி மூலம் மோதி தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் ஓட்டலுக்குள் நுழைந்த தீவிரவாதிகள் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளால் தாக்குதல் நடத்த பெரும் பரபரப்பு உருவானது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் பதிலடி கொடுக்க சுமார் 7 மணி நேரங்கள் நீடித்த துப்பாக்கிச் சண்டைக்கு பின்னர் 3 தீவரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார், 3 பேர் காயம் அடைந்தனர். ஓட்டலில் இருந்த பணியாளர்கள் அல்லது விருந்தினர் யாரும் காயம் அடையவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.


Find out more: