மும்பை:
இதயம்தானா? அல்லது கல்லில் செய்யப்பட்டதா என்பதுதான் தெரியவில்லை இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதில் இருந்து. என்ன விஷயம் தெரியுங்களா?
ஓயாமல் அழுத குழந்தையை சுவற்றில் மோதி கொலை செய்த வளர்ப்புத்தாளை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வேதனை நடந்தது மும்பையில்.
மும்பையில் வசித்து வருபவர் அப்துல் ஷேக். இவர் தன்னுடைய முதல் மனைவியை பிரிந்து விட்டார். இவருக்கு இரு குழந்தைதைள் உள்ளனர். குழந்தைகளை தன் பொறுப்பிலேயே வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த ஓராண்டு முன்பு குழந்தைகளை வளர்க்க வேண்டி ரசியாஷேக் என்ற பெண்ணை 2வது திருமணம் செய்துள்ளார்.
இங்குதான் வினையே ஆரம்பித்துள்ளது. அப்துல் ஷேக் சம்பூர் பகுதியில் ஒரு ஹோட்டலை நடத்தி வருகிறார். ரசியா இரு குழந்தைகளையும் பராமரித்து வந்தார். இந்நிலையில் கடந்த அப்துலில் ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் ஓயாமல் அழுது கொண்டே இருந்துள்ளது.
இதில் ரசியாவிற்கு பெரும் கோபம் ஏற்பட்டுள்ளது. சமாதானப்படுத்தியும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. இதனால் குழந்தையின் தலையை வீட்டு சுவற்றின் மீது மூன்று முறை மோதியுள்ளார். இதனால் குழந்தை மயக்கமடைய அதிர்ச்சியடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
தொடர்ந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதில் தலையில் காயம் உள்ளதை டாக்டர்கள் கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க, பின்னர் நடந்த விசாரணையில் ரசியா உண்மையை ஒத்துக்கொண்டுள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் மும்பையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.