சென்னை:
கட்சித் தலைவர் என்னை அறைந்தார் என்று பொய்யான தகவலை ராஜ்யசபாவில் பதியவைத்து வரலாற்றில் அழுக்கான பக்கங்களை சேர்த்துள்ளார் ஒரு எம்பி. இதுவரை நடக்காத ஒரு கேவலமான செயல் அரங்கேறியுள்ளது. தன் பதவியை பாதுகாத்து கொள்ள எந்த ரேஞ்சிற்கும் இறங்குவார்கள் அரசியல்வாதிகள் என்பதும் நிரூபணம் ஆகியுள்ளது.


கடந்த 2 நாட்களாக தமிழகத்தை பரபரப்பாக்கியுள்ள "பளார்" "பளார்" சம்பவம் பற்றிய விரிவான அலசலை இந்த கட்டுரையில் காணலாம். இந்த "அறை" வைபவமும் ஒரு நாடகம்தான். தாங்கள் தங்கள் கட்சியில் லைம் லைட்டிற்கு வரவேண்டும் என்று திட்டம் போட்டு நடத்தப்பட்டது என்று அரசியலை உற்று நோக்குபவர்கள் தெரிவிக்கும்போது "பகீர்" என்கிறது. விஷயத்தை பார்ப்போம். 


அதிமுகவின் ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா. திமுக ராஜ்யசபா எம்பி திருச்சி சிவா. இவர்கள் இருவரும் தான் இந்த "அறை" விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்லி விமான நிலையத்தில் வைத்து சசிகலா புஷ்பா, திருச்சி சிவாவிற்கு விட்டார் அறை. ஒன்றா... இரண்டா... நான்கு அறை விட்டு கன்னத்தை பழுக்க வைத்தார். அவ்வளவுதான் அரசியல் அரங்கு தீப்பிடித்த ராக்கெட் போல் ஆனது. பரபரப்புதான். ஆனால் இதை சசிகலா புஷ்பா மறைக்க வில்லை. என்ன சொன்னார் தெரியுங்களா? என் தலைவி, அம்மா, முதல்வர் ஜெ.,வை பற்றியும், அதிமுக பற்றியும் தரக்குறைவாக பேசினார் சிவா. அதனால்தான் அறைந்தேன். அதுவும் நான்கு முறை அறைந்தேன் என்று பெருமிதமாக அறிக்கை விட்டார்.



இதற்கு திருச்சி சிவா தரப்பில் இருந்து எவ்வித பதிலும் இல்லை. மவுனம்தான். இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் சசிகலா புஷ்பாவிற்கு ஒரு ஹீரோயின் அந்தஸ்த்து உருவானது. ஆனால் பின்னர் நடந்ததுதான் செம காமெடி. இந்த பளார் விவகாரம் குறித்து தன் விசுவாசிகள் வாயிலாக விசாரித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. பொது இடத்தில் எம்.பி. ஒருவர் எதிர்கட்சியை சேர்ந்த எம்பியை தாக்குவது என்றால் எவ்வளவு பெரிய கேவலமான செயல். இதற்கிடையில் இந்த "பளார்" சம்பவம் தன்னையோ...கட்சியையோ குறித்த பேச்சினால் நடத்தப்பட்டது அல்ல என்ற உண்மையை கண்டுபிடித்த முதல்வர் அதிரடியாக எம்.பி. சசிகலா புஷ்பாவை அழைத்து விசாரிக்க உத்தரவிடவே... காட்சிகள் மாறின. இந்த சம்பவத்திற்கு பின்னால் இருந்த நாடகமும் திரைக்கு முன்னால் வந்தது.



இது பளார்... பளார்....சம்பவத்திற்கு பின்னால் இரு எம்பிக்களின் பர்சனல் மேட்டர் இருப்பதை அறிந்தவுடன் ஞாயிற்றுக்கிழமையே சசிகலாபுஷ்பாவை அழைத்து பேச உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா. மறுநாள் ராஜ்யசபாவில் சசிகலாபுஷ்பா பேசி பேச்சுதான் நாட்டின் பார்வையையே அவர் பக்கம் திரும்பும் அளவிற்கு செய்து விட்டார். ராஜ்யசபாவில் பேசிய சசிகலா புஷ்பா, முதல்வர் ஜெயலலிதா மீதே வைத்தார் பாருங்க ஒரு புகாரை. அதுதான் ஹைலைட். 



என்ன சொன்னார் தெரியுங்களா... என் கட்சித் தலைவர் என்னை அறைந்தார்' என ராஜ்யசபாவில் சசிகலா பேசிய பேச்சு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.


அத்தோடு விட்டாரா? இந்த அரசு எனக்கு பாதுகாப்புத் தருமா? என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. நான் பதவியை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டேன். ஒரு கட்சி தலைவர் எம்பியை அறைய முடியும்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
என்னை அறைந்தார் என் கட்சியின் தலைவர். என் வீட்டில்கூட என்னால் பாதுகாப்பாக வாழ முடியாது என்று அணைக்கட்டை உடைத்துக்கொண்டு வரும் தண்ணீர் போல கண்ணீர் விட்டு கதறினார். இதனால் ராஜ்யசபாவே ஸ்தம்பித்தது. இதற்கு மற்ற அதிமுக எம்பிக்கள் கண்டனம் தெரிவிக்க... திமுக எம்பிக்கள் ஆதரவு தெரிவித்ததுதான் பெரிய அரசியல் கூத்தாக மாறிவிட்டது.



ஞாயிற்றுக்கிழமையன்று ஜெ., யாரையும் சந்திக்க மாட்டார். விருப்பப்பட்டாலும் சந்திப்பு என்பது வெகுஅரிது என்பதை கட்சிக்காரர்கள் அனைவரும் அறிவர். அப்படி இருக்கும் போது எப்படி சசிகலாபுஷ்பாவை ஜெ., அறைந்திருக்க முடியும். நடந்தது வேறு.


ஞாயிற்றுக்கிழமையன்று போயஸ் தோட்டத்திற்கு அழைக்கப்பட்ட சசிகலா புஷ்பாவை விசாரித்ததே தம்பிதுரையும், பூங்குன்றனும் மட்டும்தானாம். மேடம் ரொம்ப கோபமா இருக்காங்க. ரிசைன் லெட்டர் எழுதிக் கொடுத்துட்டுப் போங்க என்று சொன்னதே தம்பிதுரைதானாம். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து பேசவே... தம்பிதுரையும் பதிலுக்கு பேசியதோடு ஒரு வெற்றுத் தாளைக் கொடுத்து வலுக்கட்டாயமாக ராஜினாமா கடிதத்தை எழுதி வாங்கிவிட்டாராம்.



முதல்வர் ஜெயலலிதாவை சசிகலா புஷ்பா சந்திக்கவே இல்லை. இதனால்தான் ராஜ்யசபாவில் பேசி தேசிய அளவில் தனக்கு அனுதாபம் ஏற்படும் அளவிற்கு கண்ணீர் விட்டு பேசி அனுதாபத்தை சம்பாதித்துக் கொண்டுவிட்டார் சசிகலா புஷ்பா என்கின்றனர் விபரமறிந்தவர்கள். 



இந்த அறை விவகாரம் கூட இருவருக்கும் இடையே இருந்த பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம்தானாம். சசிகலாபுஷ்பா திருச்சி சிவாவிற்கு பணம் கொடுத்துள்ளார். இதை கேட்டு போன் செய்த போது சிவா எடுக்கவில்லையாம். டில்லி விமானநிலையத்தில் நேருக்கு நேர் பார்த்தபோதுதான் டென்ஷனாகி "அறை" வைபவம் நடந்துள்ளது. இதை தனது அரசியலுக்கு பயன்படுத்தி கொண்டு விட்டார் சசிகலாபுஷ்பா. ஆனால் இந்த உண்மைகள் உடனே வெளியில் வந்து விட்டன. சசிகலாபுஷ்பா ராஜ்யசபாவில் இப்படி பேசிய சில நிமிடங்களிலேயே அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாமல் உடனடியாக கட்டம் கட்டி நீக்கிவிட்டார் முதல்வர் ஜெயலலிதா.



இதற்கிடையில் தான் தன் பதவியை ராஜினாமா செய்யவே மாட்டேன் என்று சசிகலாபுஷ்பா அறிவித்துள்ளார். தங்களின் சொந்த விஷயத்திற்காக பொது இடத்தில் கேவலமாக நடந்து கொண்டு அதை அரசியலாக்கிய இந்த எம்பிக்கு ஆஸ்கார் விருதே தரலாம் என்கின்றனர் அதிமுகவினர். ஜெயலலிதாவை பற்றி தவறாக பேசியதால் சசிகலாபுஷ்பா வீடும் தாக்கப்பட்டது. இந்நிலையில் அறை கொடுத்த சிவாவிடமும், அவரது கட்சி தலைமையிடமும் சசிகலாபுஷ்பா... மன்னிப்பும் கேட்டு புஸ்...ஸ்..ஸ்..என்று அடங்கி போய் உள்ளார். 



தனது எம்.பி., பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மிகப் பெரிய நாடகத்தை சசிகலா புஷ்பா அரங்கேற்றி விட்டார் என்று தற்போது வெட்டவெளிச்சமாகி உள்ளது. எம்.பி. திருச்சி சிவாவை அரசியல் அரங்கில் உள்ளவர்கள் அனைவரும் நன்றாக அறிவார்கள். அவர் பிற விஷயங்களில் எப்படியோ... ஆனால் வெகு நாகரீகமான மனிதர். தனி நபர் மீதான தாக்குதலோ... அசிங்கமான வார்த்தைகளே பேசாத நல்ல அரசியல்வாதி... ஆனால் இந்த நாடகத்திற்கு அவரும் ஒரு உடந்தையானதுதான் அரசியலை பரபரப்பாக்கி உள்ளது.


Find out more: