சென்னை:
விமானங்களுக்கு இப்போது நேரம் சரியில்லாத நேரம் போல் இருக்கிறது. காணாமல் போன விமானமும் கிடைக்கலை... இப்போ... இதுபோல விபத்து என்று பயணிகள் நொந்துபோய் உள்ளனர்.
சென்னையிலிருந்து துபாய் செல்லும் ஜெட் ஏர்வேஸ், இன்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன எதற்கு தெரியுங்களா?
கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து, சென்ற பயணிகள் விமானம், துபாயில் தரையிறங்கியபோது திடீரென தீப்பிடித்தது.
ஆனால் உடனடியாக இந்த தீயை விமான நிலைய பணியாளர் அணைத்ததில் 275 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் இவ்விபத்தின் காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் ஜெட் ஏர்வேஸ், இன்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் துபாய் பயணமாக இருந்த பயணிகள் அவதியடைந்துள்ளளனர். இது விமானங்களுக்கு போதாத நேரம் போலிருக்கு.