சென்னை:
மீண்டும்...ஆரம்பத்தில் இருந்தா... என்னதாங்க நடக்கிறது என்று மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். என்ன விஷயம் தெரியுங்களா?
சென்னை- நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் சுவாதியின் நண்பர் முகமது பிலாலிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தியதுதான் இதற்கு காரணம்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, கடந்த ஜீன் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார். தமிழகத்தை ஒரு உலுக்கி உலுக்கிய இந்த வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளான்.

இக்கொலை வழக்கு தொடர்பாக சுவாதியின் நண்பர் முகமது பிலாலிடம் போலீசார் பலமுறை விசாரணை நடத்தினர். இந்நிலையில் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் முகமது பிலாலிடம் போலீஸ் உயரதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தி உள்ளனர்.
2 மணி நேரத்திற்கும் மேல் நீடித்த இந்த விசாரணையில், சுவாதி கொலை குறித்து பல்வேறு கேள்விகளை பிலாலிடம் போலீசார் கேட்டனர் என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணை மீண்டும் நடத்தப்பட்டது எதற்காக என்பது குறித்து போலீஸ் தரப்பில் இதுவரை தெரிவிக்கவில்லை.