புதுடில்லி:
சென்னையிலிருந்து அந்தமானுக்கு பறந்தபோது மாயமான விமானப்படைக்கு சொந்தமான விமானத்தை தேடும் பணியில் ரஷ்ய ரஷ்ய கடற்படை கப்பல் களத்தில் இறங்கி உள்ளதாம். 


சென்னையிலிருந்து பயணிகளுடன் அந்தமானுக்கு இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் புறப்பட்டது. அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடத்தில் தொடர்பை இழந்து மாயமானது. இதனால் விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது.
பயணிகள் நிலை தெரியாத நிலையில் பல கட்டங்களாக தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால் விமானம் குறித்து எவ்வித தகவலும் கண்டறிப்படவில்லை. 


இந்நிலையில் ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான கப்பலும் இணைந்து மாயமான விமானத்தை தேடி வருகிறது. இந்திய கடற்படையும், ரஷ்ய கப்பலும் இணைந்து தேடியும் விமானம் குறித்து எந்த தடயமும் கிடைக்கவில்லை. வரும் 6ம் தேதிவரை சோனார் ஒலி அலை மூலம் மாயமான விமானத்தை தேடும் பணியில் ரஷ்ய கப்பல் இணையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Find out more: