திருவனந்தபுரம்:
அவரா? அரசியலிலா? அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதற்கு என்ன காரணம் தெரியுங்களா?


பிரபல மலையாள நடிகர் மோகன்லால், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசியுள்ளார். இதனால் அவர், அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.




நடிகர் மோகன்லால். இதுவரை அரசியலில் அவர் ஆர்வம் காட்டியது கிடையாது. இந்நிலையில், இவர் திடீரென கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனை சந்தித்து பேசியுள்ளார்.


இதனால், அவர், மார்க்சிஸ்ட் கட்சியில் சேரவுள்ளதாக பரபரப்பு எழுந்தது. மோகன்லால் அரசியலில் குதித்து விட்டார் என்ற வதந்தி கிடுகிடுவென பற்ற வைத்த வெடி போல கேரளா முழுவதும் பரவ... ரசிகர்கள் அதிர்ந்துதான் போய் விட்டனர். எவ்வித தகவலும் இல்லாமல் மோகன்லால் அரசியலில் குதித்து விட்டாரா என்று!


இந்த வதந்திகளுக்கு மோகன்லால் வைத்துள்ளார் ஒரு முற்றுப்புள்ளி. ஒருபோதும் அரசியல் பக்கம் போக மாட்டேன். நடிப்பு மட்டும் தான் எனக்கு தெரிந்த தொழில். வாய்ப்புள்ள வரை, அதை செய்வேன். முதல்வர் பினராயி விஜயன் நல்ல மனிதர். தற்போது உயர்ந்த இடத்துக்கு வந்துள்ளார். அவரை நட்பு ரீதியாகதான் சந்தித்தேன். நான் ஒருபோதும் அரசியலில் குதிக்க மாட்டேன் என்று கூறி இந்த சர்ச்சைகளுக்கு வைத்துள்ளார் ஒரு முற்றுப்புள்ளி.



Find out more: