டில்லி:
டில்லியில் துணை நிலை ஆளுனருக்கு கூடுதல் அதிகாரம் உண்டு, நிர்வாக தலைவராகவும் அவரே இருப்பார். டில்லி அமைச்சரவையின் முடிவு துணைநிலை ஆளுநரை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்று உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவால் ஆடிப்போய் கிடக்கிறது ஆம் ஆத்மி அரசு.


டில்லி நிர்வாகத்தின் தலைவராக துணை நிலை ஆளுநர் இருப்பதையும், அவருக்கும் உள்ள அதிகாரத்திற்கு எதிராகவும் டில்லி அரசின் சார்பில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 


டில்லியில் துணை நிலை ஆளுநர் - முதல்வர் கெஜ்ரிவால் இடையே அதிகாரப் போட்டி முற்றியது. டில்லி மாநில உள்துறை செயலாளர் நியமனத்தில் தொடங்கிய துணை நிலை ஆளுநர், முதல்வர் இடையேயான மோதல் தொடர்ந்து முற்றிய நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக மாநில உயர்நீதிமன்றம் போட்டுச்சு பாருங்க ஒரு அதிரடி தீர்ப்பை. எதற்கு தெரியுங்களா?


ஆளுனருக்கு எதிராக கெஜ்ரிவால் அரசு தொடர்ந்த வழக்கில்தான் இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டில்லியில் துணை நிலை ஆளுனருக்கு கூடுதல் அதிகாரம். நிர்வாக தலைவராகவும் அவரே இருப்பார். டில்லி அமைச்சரவையின் முடிவு துணைநிலை ஆளுநரை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்று உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அமைச்சரவையின் யோசனையை துணைநிலை ஆளுநர் கேட்க அவசியம் இல்லை. அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் அதிகார பகிர்வு போன்றவற்றில் கவர்னருக்கு முழு அதிகாரம் உள்ளது என டில்லி உயர்நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


டில்லி அரசின் சார்பில் வழக்கு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இது கெஜ்ரிவால் அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இப்படி டில்லிக்கு வைத்த குட்டுக்கு புதுச்சேரியில் தலை வீங்கி உள்ளதாம்.


இது என்ன கூத்து என்று கேட்கிறீர்களா?  அமைச்சரவையின் யோசனையை துணை நிலை ஆளுநர் கேட்கவேண்டும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி கூறி வந்த நிலையில், டில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவு நாராயணசாமிக்கு அடிவயிற்றை ஒரு கலக்கு கலக்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கும் என்கின்றனர் அரசியல்வாதிகள். அங்கு துணை நிலை ஆளுனராக பொறுப்பேற்றுள்ள கிரண்பேடி புதுச்சேரி வளர்ச்சிக்காக அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


Find out more: