கண்ணமங்கலம்:
ஒத்த வடை... ஒத்த வடை ரூ.11 ஆயிரம் என்றால் நம்புவீங்களா? நம்பித்தான் ஆகணும். இது பக்தி சமாச்சாரம்ங்க...


கண்ணமங்கலம் அருகே ஆதிபராசக்தி அம்மன் கோயிலில் பக்தர் ஒருவர் கொதிக்கும் எண்ணெயில் இருந்து கைகளால் எடுத்த வடைதான் ரூ.11 ஆயிரத்துக்கு ஏலம் போய் உள்ளது.


  கண்ணமங்கலத்தை அருகே துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோயிலில் நடக்கும் ஆடிப்பூரம் விழா செம பேமஸ். இந்த விழாவில்தான் கொதிக்கும் எண்ணெயில் இருந்து கைகளால் பக்தர்கள் வடைகள் எடுக்கும் பக்தி நிகழ்ச்சியும் நடந்தது. 


அந்த வடைகளில் 7 வடைகள் ஏலம் விட முதல் வடை ரூ.11 ஆயிரத்து 100-க்கு ஏலம் போயிருக்கு... போயிருக்கு...



Find out more: