புதுக்கோட்டை:
மீண்டும்... மீண்டும் என்று இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர் கதையாகி வருகிறது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து படகையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.