சென்னை:
நடிகை ஜோதிலட்சுமி மற்றும் இயக்குனர் பஞ்சு அருணாசலம் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: "பிரபல திரைப்பட நடிகையும், நடனக் கலைஞருமான ஜோதிலட்சுமி உடல்நலக் குறைவால் காலமான செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.


அவர் கடினமான உழைப்பாளி, பழகுவதற்கு இனிமையானவர். ஜோதிலட்சுமி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 


மேலும் பழம்பெரும் தமிழ்த் திரைப்பட திரைக் கதை ஆசிரியரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான பஞ்சு அருணாசலம் அவர்களும் உடல்நிலைக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.


பஞ்சு அருணாசலம்


எளிமையானவரும், பழகுவதற்கு இனிமையானவருமான பஞ்சு அருணாசலம் மறைவு தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு பேரிழப்பாகும். பஞ்சு அருணாசலம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Find out more: