துபாய்:
துப்பாக்கி துண்டு பாயும் வேகத்தை போல் ஒரு போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்த துபாய் மும்முரமாய் அமைந்துள்ளது.


மணிக்கு 1200 கி.மீ., வேகத்தில் பயணம் செய்யக் கூடிய போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் துபாய் மும்முரமாய் ஈடுபட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


ஒரு டியூப் வடிவ அமைப்பை ஒரு இடத்திற்கும் இன்னொரு இடத்திற்கும் இடையே ஏற்படுத்தி அதன் வழியே, 'கேப்ஸ்யூல்' போன்ற சாதனத்தில் அமர்ந்து பயணிகள் செல்லக் கூடிய வகையில் இந்த போக்குவரத்து இருக்கும் என்று கூறப்படுகிறது.


இந்த அமைப்பு இன்னமும் முழுமையாக டிசைன் செய்யப்படவில்லை. சிறந்த 100 பொறியாளர்களை அழைத்து போட்டியை நடத்தி, இப்போக்குவரத்தை டிசைன் செய்ய துபாய் ஏற்பாடு செய்துள்ளது.


'ஹைபர்லுாப்' என அழைக்கப்படும் இந்த அமைப்பில், பயணிகள் அமரும் கேப்ஸ்யூல், துப்பாக்கி குண்டு போல் படு வேகத்தில் 'சுடப்படும்'. இது, பயணிகளை சுமந்துகொண்டு துப்பாக்கி குண்டு போல், படுவேகத்துடன் டியூப்பிற்குள் பாயும். எந்த தடையும் கேப்ஸ்யூலின் வேகத்தை குறைத்து விடக் கூடாது என்பதற்காக, டியூப்பிற்குள் குறைந்த காற்றழுத்தம் பராமரிக்கப்படும். டியூப்பிற்கு மேற்புறம் சோலார் பேனல்கள் வைக்கப்பட்டு, மின்சாரம் தயாரிக்கப்பட்டு, கேப்ஸ்யூலை தொடர்ந்து வேகத்துடன் தள்ளும்.


இப்புதிய அமைப்புக்காக, உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது. இந்த அமைப்பு கொண்டு வரப்பட்டால், அது சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 


Find out more: