லக்னோ:
நாலு வயதில் இப்படி ஒரு அசாத்திய அறிவாற்றலா... அனைவரையும் அசத்துகிறாள் சிறுமி. காரணம் இந்த சிறுமி இப்போ படிப்பது 9ம் வகுப்பில் என்றால் பார்த்துக் கொள்ளுங்க... என்ன மயக்கம் வருகிறாதா. ஆனால் இதுதான் உண்மை. 


உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் உள்ள பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் அடிப்படை ஊழியராக பணியாற்றி வருபவர் தேஜ் பகதூர். இவரது குழந்தைகள் அனைவரும் சிறுவயதிலேயே சாதனை படைப்பவர்களாக உள்ளனர். எப்படி தெரியுங்களா?


இவரது 15 வயது மகள் சுஷ்மா சிறுவயதியிலேயே பட்டதாரியாகி, நுண்ணுயிரியில் தொடர்பான முனைவர் பட்டத்துக்கு படித்து வருகிறார். இது ஆச்சரியம் நம்பர் ஒன். அடுத்து இவரது தம்பி ஷைலேந்திரா ஒன்பது வயதில் பிளஸ் 2 தேர்வு எழுதி  தேர்ச்சியடைந்துள்ளான். தேஜ் பகதூரின் கடைசி மகளான நான்கு வயது அனன்யா மழலையர் வகுப்பில் சேர்ந்து படிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் இங்குள்ள ஒரு பள்ளியில் நேரடியாக ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.


அப்போ... இது ஆச்சரிய குடும்பம்தானே... மழலைப் பருவத்திலேயே தனது அக்கா மற்றும் அண்ணனின் புத்தகங்களை எடுத்து படிக்க கற்றுகொண்ட அனன்யா, தற்போது ஒன்பதாம் வகுப்பில் சேர்வதற்கான நுழைவு தேர்வில் வெற்றி பெற்று விட்டாள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்...


ஒன்பதாம் வகுப்பில் நேரடியாக சேர்ப்பது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி ஒப்புதலுக்காக பள்ளி நிர்வாகம் காத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இதே பள்ளியில் அனன்யாவின் அக்கா சுஷ்மா தனது 5 வயதில் 9ம் வகுப்பு சேர்ந்தார். இப்போ அனன்யா... 4 வயதிலேயே 9ம் வகுப்பிற்கு வந்துவிட்டார். 


தனது பிள்ளைகளின் அறிவாற்றல் தொடர்பான செய்திகள் வெளியாக தொடங்கிய பிறகுதான் தேஜ் பகதூருக்கு பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் வேலையே கிடைத்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்க... தந்தைக்கு மகள்கள், மகன் ஆற்றும் உதவி... போல் உள்ளது. 



Find out more: