புதுடில்லி:
டில்லியில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தை இடம் மாற்றம் செய்யறாங்களாம்... செய்யறாங்களாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


பா.ஜ.,வின் தலைமை அலுவலகம் டில்லியின் மரங்கள் அடர்ந்த அசோகா சாலையில் வெகுகாலமாக இயங்கி வருகிறது. இங்கு தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் துணைப்பிரதமர் அத்வானி ஆகியோர் கட்சி பணிகளை மேற்கொண்டனர். மேலும் தொண்டர்களை சந்தித்ததும் இந்த அலுவலகத்தில்தான்.


இந்த அலுவலகம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனர் தீன்தயாள் உபத்யாயா பெயரில் உள்ள சாலையில் புதிதாக அலுவலகம் கட்டப்பட்டு அங்கு மாற இருக்காம். புதிய அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 18ம் தேதி நடக்குதாம். இதில் பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் அமித் ஷா மற்றும் பலர் கலந்துக்கிறாங்கன்னு தகவல் வெளியாகி இருக்கு. 


இந்த புதிய அலுவலகம் வரும் 2019 பொதுத்தேர்தலுக்கு முன் கட்ட முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 70 அறைகள், இரண்டு ஆலோசனை கூடங்கள், டிஜிட்டல் லைப்ரரி ஆகியவை இடம் பிடிக்கும். கட்சி அவலகத்திற்கு வரும் தொண்டர்கள் பசியாறும் வகையில் உணவகங்களும் அமைக்க போறாங்களாம். 200 வாகனங்கள் வரை நிறுத்த இட வசதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. 



Find out more: