மாட்ரிட்:
அட கொய்யால... அது என்ன பஸ்சா... நீ ஓடி வந்து ஏற... என்று இந்த சம்பவத்தை பார்த்தவர்களின் கமெண்ட் இதுவாகத்தான் இருந்திருக்கும். என்ன விஷயம் என்றால்...


பொலிவியா நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஸ்பெயினுக்கு வந்திருந்தார். அவர் மாட்ரிட் நகரில் இருந்து கிரான் கெனேரியா நகருக்கு செல்வதற்காக ரெயான் நிறுவன விமானத்தில் டிக்கெட் வாங்கி இருந்தார்.


இவர் விமான நிலையத்திற்கு தாமதமாக வந்துள்ளார். இவருக்காக விமானம் காத்திருக்குமா என்ன? அது என்ன டவுன் பஸ்சா? இவர் உரிய நேரத்தில் விமானத்தில் ஏறவில்லை.


விமானம் புறப்படும் நேரத்தில் இரண்டு கையிலும் பைகளுடன் ஓடி வந்துள்ளார். அதற்குள் விமானம் புறப்படுவதற்காக ஓடு தளத்தை நோக்கி சென்றுவிட்டது.


அவ்வளவுதான் அந்த வாலிபர் குகை பாதை வழியாக கீழே குதித்து விமானத்தை நோக்கி பிடித்தார் பாருங்கள் ஓட்டம். கையில் பையுடன் விமானத்தை நோக்கி ஒருவர் ஓடுவதை பார்த்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீவிரவாதி விமானத்தை தகர்க்க செல்கிறாரோ என்ற அச்சத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்ட விமான நிலைய ஊழியர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.


அவரோ திமிறிக்கொண்டு விமானத்தில் ஏற வேண்டும் என்று மீண்டும்... மீண்டும் கூறியுள்ளார். இந்த பரபரப்பு நடக்கும் போதே விமானம் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டது.


பின்னர் அவரிடம் அதிகாரிகள் விசாரித்த போது விமானத்தை பிடிப்பதற்காகத்தான் ஓடி வந்தேன் என்று தெரிவித்துள்ளார். அட கொய்யால அது என்ன டவுன் பஸ்சா...ஓடி போய் ஏறுவதற்கு என்று நொந்துக்கொண்ட அதிகாரிகள்... அவரை அங்கிருந்து அழைத்து சென்றனர். அந்த பயணி பற்றிய மற்ற தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.


Find out more: