புதுடில்லி: 
வரச்சொல்லுங்க... அவரை வரச்சொல்லுங்க என்று காங். எம்.பிக்கள் போர்க் கொடி தூக்கி உள்ளனர். எதற்கு தெரியுங்களா?


ஒலிம்பிக் போட்டிகளில் விதிமுறைகளை மீறி நடந்துக்கிட்டார் என்று ஒலிம்பிக் கமிட்டி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் மீது குற்றம் சாட்ட இதை அவர் மறுத்திருந்தார். ஆனால் வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல் இதை பிடித்துக்கொண்டது காங்கிரஸ். 


விஜய் கோயல்



அப்புறம் என்ன போர்க்கொடிதான். விஜய் கோயலை இந்தியாவிற்கு திரும்ப வரச் சொல்லுங்கள் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளனர்.


பாராளுமன்றத்தில் நேற்று பூஜ்ய நேரத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரதாப் சிங் பஜ்வா, 'ஒலிம்பிக்கில் கோயல் நடந்து கொண்டதை தேசிய டிவி சேனல்கள் திரும்பத்திரும்ப ஒளிபரப்பி வருகின்றன. 


எனவே, விஜய் கோயலை ஒலிம்பிக் நகரில் இருந்து திரும்ப அழைக்க  பிரதமரை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.


இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து பேசிய துணை சபாநாயகர் குரியன், ‘இது குற்றச்சாட்டுதான், விசாரணைக்கு உகந்ததல்ல’ என்று முடித்து வைத்தார். இருப்பினும் விஜய் கோயல் விவகாரம் வரும் நாட்களில் பெரிதாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெறும் வாயை மென்றவர்களுக்கு அவல், பொட்டுக்கடலை அத்தோடு வெல்லமும் கிடைத்தால் எப்படி இருக்கும். அப்படி இருக்கு இப்போ... காங்கிரசுக்கு...



Find out more: