இங்கிலாந்து:
நான் ரத்த காட்டேரியாக வாழ்ந்து வருகிறேன். ஆனால் நல்ல ரத்த காட்டேரி தெரியுங்களா என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார் ஒருவர். எங்கு தெரியுங்களா?


இங்கிலாந்தை சேர்ந்த டார்க்னெஸ் விலாட் டெபேஸ் (25) என்பவர்தான் இப்படி கூறியுள்ளார். கடந்த 13 ஆண்டுகளாக தான் ரத்த காட்டேரியாக வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:


 நான் சிறுவனாக இருந்தபோது ஒருநாள் நாயுடன் வெளியே சென்றேன். அங்கு இறந்த மனிதர்களின் உடலில் வாழும் சாம்பி பெண்களை பார்த்தேன். அவ்வளவுதான் குலை நடுங்கி போய் ஓடி வந்துவிட்டேன்.


 பின்னர் ரத்தக் காட்டேரி படங்களை அதிகளவில் பார்க்க ஆரம்பித்தேன். மேலும் நிறைய புத்தகங்கள் படித்தேன். பின்னர் நான் ரத்த காட்டேரியாக மாறுவதை உணர்ந்தேன். என் பெயருடன் டார்க்னெஸ் என்பதை சேர்த்து கொண்டேன்.


தற்போது தினமும் மாடு, பன்றியின் ரத்தத்தை குடித்து வருகிறேன். மனிதர்களின் ரத்தம் கிடைத்தால் அதையும் விடுவதில்லை. இறந்து போன ஆன்மா ஒன்று எனது உடம்பில் வாழ்ந்து வருகிறது. அதற்காகவே நான் ரத்தம் குடித்து வருகிறேன். நான் மற்றவர்களுக்கு ரத்த காட்டேரியாக தெரிய வேண்டும் என்பதற்காக கண்களுக்கு மை பூசி கொள்கிறேன். நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்ததில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 


அட அவனாய்யா... நீ... தீங்கு விளைவிக்க மாட்டேன் என்று சொல்லிப்புட்டு அப்புறம் கழுத்தை கடித்தால் என்ன செய்வது என்று இந்த செய்தி கேள்விப்பட்டதில் இருந்து இங்கிலாந்து மக்கள் "திக்.. திக்... திடுக்... திக்... என்று உள்ளனராம்.


Find out more: