பெய்ஜிங்:
நடக்குமா... இப்படியும் நடக்குமா என்று அதிசயப்படும் அளவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. என்ன தெரியுங்களா?
கப்பலில் இருந்து கடலுக்குள் விழுந்த ஒரு பெண் 38 மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டதுதான். சீனாவை சேர்ந்த பெண் பான் (32). இவர் ஜப்பானில் உள்ள பியூகுயோகாலில் இருந்து ஷாங்காய் நகருக்கு சொகுசு பயணிகள் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
ஷாங்காய் பகுதிக்கு வந்த போது கப்பலின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த அவர் கடலுக்குள் தவறிவிழுந்தார். அவரது துரதிர்ஷ்டம் இதை யாருமே கவனிக்கவில்லை என்பதுதான்.
இதற்கிடையே கடலுக்குள் விழுந்த அவர் தண்ணீரில் மிதந்தபடியே இருந்தார். திடமான மனதுடன் இருந்துள்ளார். ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் அல்ல பல மணி நேரம் இரவு பகலாக மிதந்துள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்க...
38 மணி நேரம் கழித்து ஒரு மீன் பிடி படகு அங்கு வந்தது. அதில் வந்தவர்கள் கடலில் மிதந்த பான்னை பார்த்து மீட்டனர்.
பின்னர் அவர் கரைக்கு கொண்டு வரப்பட்டார். கடலில் மிதந்த போது அவரது உடலில் ஜெல்லி மீன்கள் கொட்டியதால் சிறு காயங்கள் இருந்தன. சிறு...சிறு... கொப்புளங்களும் ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். கடலில் விழுந்து 38 மணிநேரம் மிதந்த பெண் உயிருடன் மீட்கப்பட்டது அதிசயம்தானே!