சிம்லா:
சாலைகளை காணோம்... போக்குவரத்தும் "கட்" சிம்லாவில் மக்கள் தவியாய் தவிக்கின்றனர். என்ன காரணம்...
மழை... மழை... கனமழைதான். சிம்லாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு "ஆப்பு" வைத்துள்ளது. இந்த மழையால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்தும் கட் ஆக மக்கள் தவித்து வருகின்றனர்.
இமாசலப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சிம்லாவில் பெய்து வரும் மழை மக்களை வெகுவாக வாட்டி வருகிறது. முக்கியமான சாலைகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர்.
எந்நேரமும் நிலச்சரிவு ஏற்படலாம் என்பதால் மலைப்பகுதிகளில் வசித்து வரும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் சிம்லா தற்போது தண்ணீரால் தவித்து வருகிறது.