சென்னை:
என்னம்மா... இப்படி பேசி... சர்ச்சையை கிளப்பி விட்டுட்டீங்களேம்மா என்று தலையில் அடித்துக் கொண்டுள்ளனர் மக்கள். எதற்காக தெரியுங்களா?
தமிழகத்தில் ஜல்லிக்கட்டை வைத்து அரசியல் செய்யப்படுவதாக, மத்திய அமைச்சர் மேனகா காந்தி குற்றம் சாட்ட தற்போது இந்த சர்ச்சை பேச்சு அரசியல் அரங்கில் பெரும் வெடியை கொளுத்தி போட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய மேனகா காந்தி, கடந்த 10 ஆண்டுகளாக யானைகள் வழித்தடத்தில் செல்லும் போது ரயிலை மெதுவாக இயக்க கோரி ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்து வருகிறேன். ஆனால் அவர்கள் இதை காது கொடுத்து கேட்பதில்லை.
ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. இது மிகவும் ஆபத்து வாய்ந்த பாரம்பரிய விளையாட்டு. தமிழக அமைச்சர்கள் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லாமல் ஜல்லிக்கட்டை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கொளுத்தி போட அந்த வெடி தற்போது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது.