ராஜஸ்தான்:
"மச்சிலி"... மச்சிலி என்று பொதுமக்கள் சோகத்தில் கண்ணீர் விட்டு வருகின்றனர். என்ன விஷயம் என்றால்...


இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் வயதான புலிகளில் ஒன்றான 'மச்சிலி' புலி ராஜஸ்தானில் உள்ள தேசிய பூங்காவில் இயற்கை காரணங்களால் இறந்ததுதான் மக்களின் கண்ணீருக்கு காரணம்.


 மச்சிலி என்ற பெயருக்கு ''மீன்'' என்று பொருள். இந்த பெண் புலியின் உடலில் அமைந்துள்ள தனித்துவமான அடையாளங்களால், இதற்கு இந்த பெயர் வைக்கப்பட்டது. மச்சிலியின் நேர்த்தியான தசை அழகின் காரணமாக அதிகளவில் படம் எடுக்கப்பட்ட பெருமைக்கு உரியது. 
ஆனால் இந்த மச்சிலி மிகவும் மூர்க்கமான குணம் கொண்டதாகும். 


நான்கு மீட்டர் நீளமுள்ள முதலையுடன் மச்சிலி சண்டையிட்டது அதன் புகழ்பெற்ற சண்டைகளில் ஒன்றாகும். இது வீடியோவில் படமெடுக்கப்பட்டு அனைவராலும் ரசிக்கப்பட்டதாகும்.


 தபால் தலைகளிலும் மச்சிலியின் படம் இடம்பெற்றுள்ளது இதன் தனிப்பெருமையை உணர்த்தும்...  ரண்தம்பூர் தேசிய பூங்காவுக்கு மச்சிலியின் புகழால், கிடைத்த வருமானம் ஆண்டுக்கு பல மில்லியன் டாலர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த மச்சிலியை பார்க்கவே அதிகளவில் மக்கள் வருகை தந்தனர். இந்நிலையில் இயற்கை காரணங்களால் மச்சிலி இறந்தது மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.


Find out more: