யாங்கூன்:
சீனா சென்றுள்ள ஆங்சான் சூகி இன்று அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறாராம்.
மியான்மரில் கடந்த ஏப்ரல் மாதம் ஆட்சிக்கு வந்த ஆங்சான் சூகியின் கட்சி, நாட்டின் வளர்ச்சிப்பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. ராணுவ அரசு கொண்டு வந்த சட்டத்தால் அதிபர் பதவி ஏற்க முடியாமல் போன ஆங்சான் சூகி, வெளியுறவுத்துறை மந்திரி உட்பட பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார்.
இந்நிலையில் ஆங்சான் சூகி அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ளார். நேற்று பிரதமர் லி கெகியாங்குடன் அவல் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து இன்று சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். அவரது இந்த பயணத்தின் போது மியான்மரில் 2 மருத்துவமனைகள் மற்றும் ஒரு பாலம் அமைப்பது தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும் என்று நம்பப்படுகிறது.
இந்த மருத்துவமனைகள் மியான்மரின் யாங்கூன் மற்றும் மண்டலை ஆகிய நகரங்களில் அமைகின்றன என்று தெரிய வந்துள்ளது.