ஜெய்ப்பூர்:
சிக்கிய உளவாளியை விசாரிக்கலாம்... விசாரிக்கலாம் என்று நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


என்ன விஷயம் என்றால்.. பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் நகரில் ஒருவரின் செயல்பாடுகள் சந்தேகத்தை கிளப்ப உளவுத்துறை போலீசாருக்கு பறந்தது தகவல்.


இதையடுத்து அந்த நபரை தங்களின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்த போலீசார் தொடர்ந்து அவர் மீதான சந்தேகம் அதிகரித்ததால் கைது செய்தனர். 


அப்போது போலீசாருக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி... அந்த நபரிடம் இந்திய எல்லைப் பகுதி வரைபடங்கள், ராணுவ கட்டமைப்பு தொடர்பான புகைப்படங்களை இருக்கவே ஐ.எஸ்.ஐ. உளவாளியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.


அவர் பெயர் நந்து லால். பாகிஸ்தானைச் சேர்ந்த இவர் உரிய விசா மூலம் இந்தியாவுக்கு வந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு விசா எடுத்திருந்த இவர் விதிமுறைகளை மீறி ஜெய்சால்மருக்கு வந்துள்ளார். தொடர்ந்து இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவரிடம் விசாரிக்க வேண்டும் என்பதால் போலீஸ் காவல் கேட்க... 24-ம் தேதி வரை நந்து லாலை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் அனுமதி அளித்தார். 


இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.


Find out more: