ராய்ப்பூர்:
சட்டீஸ்கரில் சரக்கு ரயில் தடம் புரண்டதற்கு காரணம் நக்சல்களா இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோ., நக்சல் ஆதிக்கம் அதிகம் உள்ள மாநிலம் ஆகும். இங்கு கடந்த கால வரலாற்றில் கொத்து, கொத்தாக பாதுகாப்பு படையினரை குறி வைத்து கொன்ற சம்பவம் நடந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இதுபோன்ற செயல்கள் குறைந்தன. இந்நிலையில் நக்சல்கள் அதிகம் உள்ள தன்டவட்டா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் கவிழ்ந்தது. இதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன.
தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இது நக்சல்கள் சதியாக இருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் மீண்டும் அச்சம் எழுந்துள்ளது.