முசாபர் நகர்:
வாங்க... வாங்க... கோர்ட்டுக்கு வாங்க... என்று கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது. யாருக்கு தெரியுமா?


தேர்தல் விதிமுறையை மீறிய வழக்கில் உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ் நேரில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.


முதல்வர் அகிலேஷ் தனது கட்சியை சேர்ந்த தியாகி என்பவருக்காக கடோலி நகரத்தில் கடந்த 2007-ம் ஆண்டு செப்., 1ம் தேதி பிரசாரம் செய்தார். அப்போது தேர்தல் விதிமுறையை மீறி அதிகளவில் வாகனங்கள் அவருக்குப்பின் சென்றதாக தேர்தல் கமிஷன் புகார் அளித்தது. இதன் பேரில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு நேற்று வந்தது. வழக்கை விசாரித்த உள்ளூர் நீதிமன்ற நீதிபதி அடுத்த மாதம் 22-ம் தேதி அகிலேஷ் நேரில் ஆஜராக வேண்டும் எனவும், அவருக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Find out more: