சியோல்:
பதற்றம் பற்ற வைத்த வெடிகுண்டு போல் பரவி வருகிறது... எங்கு என்று தெரியுங்களா?


வட கொரியாவின் அணு ஆயுத மிரட்டலையும் மீறி அமெரிக்காவும், தென் கொரியாவும் தங்களின் வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சியை நேற்று முதல் தொடங்கியுள்ளதால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவுகிறது.


அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து ஆண்டுதோறும் வருடாந்திர ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருவது வழக்கமான ஒன்று. இதற்கு வட கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.


இந்நிலையில், இந்த ஆண்டும் வழக்கமான வருடாந்திர போர்ப்பயிற்சியை அமெரிக்காவும், தென் கொரியாவும் தொடங்கி உள்ளன. இதில் தென்கொரிய ராணுவத்துடன், 25 ஆயிரம் அமெரிக்க வீரர்களும் கலந்து கொண்டனர். இது வடகொரியாவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுதான் தற்போது பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. இதுகுறித்து வட கொரிய ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அமெரிக்காவும், தென் கொரியாவும் மேற்கொள்ளும் கூட்டு ராணுவப் பயிற்சி, வட கொரியா மீது படையெடுப்பதற்கான ஒத்திகையே. ஆனால் நாங்களும் தயாராகத்தான் உள்ளோம்.


ஆண்டுதோறும் நடக்கும் இந்த கூட்டு ராணுவப் பயிற்சி தற்காப்பு நிலையை பலப்படுத்துவதற்காகவே நடத்தப்படுகிறது என்று அமெரிக்காவும், தென் கொரியாவும் கூறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


இருப்பினும் வடகொரியாவின் மிரட்டல், அமெரிக்கா-தென்கொரியாவின் கூட்டுப்பயிற்சி தொடர்வது ஆகியவை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. 



Find out more: