வாஷிங்டன்:
அமெரிக்கா வெளியிடுது... வெளியிடுது... ஒரு சிறப்பு தபால்தலையை... இதனால் இந்தியர்கள் மனம் மத்தாப்பூவாக மலர்ந்துள்ளது. என்ன விஷயம் தெரியுமா?


இந்தியாவில் தீபாவளி பண்டிகை எப்படி கொண்டாடப்படும் என்று உலகம் முழுவதும் வாழும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமின்றி வேலை நிமித்தமாக வெளிநாடுகளில் செட்டில் ஆன இந்தியர்களும் தீபாவளியை கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.


அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பெரும்பான்மையாக வாழும் இந்திய வம்சாவழியினர் ஒருவாரம் வரை ஆடல், பாடல், கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கைகளுடன் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.


இதேபோல் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தலைமையில் எம்.பி.க்கள், அரசு உயரதிகாரிகள், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பிரமுகர்கள் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடுவதும் மரபாக உள்ளது. 

washington deepavali festival க்கான பட முடிவு

இதற்கிடையில் இந்திய மக்களின் முக்கிய திருநாளான தீபாவளியை கவுரவிக்கும் வகையில் அமெரிக்க அரசின் சார்பில் சிறப்பு தபால் தலை வெளியிட வேண்டும் என பல ஆண்டுகளாக இந்திய மக்கள் நல சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.


இப்போது அந்த கோரிக்கை நிறைவேற உள்ளதாம். வாணவேடிக்கை பின்னணியில் தீபம் எரிய, ‘என்றென்றும் அமெரிக்கா 2016’ என்ற வாசகங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு தபால் தலை வரும் அக்டோபர் மாதம் 5-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சுமார் 30 லட்சம் பேருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இது அமைந்துள்ளது.



Find out more: