பாங்காக்:
தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு ஓட்டல் வாசலில் சக்திவாய்ந்த கார் குண்டு தாக்குதலில் ஒருவர் பலியானார். பலர் படுகாயமடைந்தனர் என்று பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


புத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் தாய்லாந்து நாட்டில் இயங்கிவரும் ஒரு சிறுபான்மையினப் பிரிவைச் தீவிரவாதிகள் வெளிநாட்டினரை குறிவைத்து அவ்வப்போது தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.


இதில் சிக்கி வெளிநாட்டு பயணிகள் பலியாகி வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது. பெரும்பாலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கியுள்ள ஓட்டல்கள் மீது இவ்வகையிலான தாக்குதல்களை நடத்துகின்றனர்.


அதுபோல் தாய்லாந்தின் தென்பகுதியில் உள்ள பட்டானி நகரில் உள்ள ஒரு ஓட்டல் அருகே மிகவும் சக்தி வாய்ந்த கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் பலியானதாகவும், 30-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


காயமடைந்தவர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.  இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Find out more: