போபால்:
தகுதிகள் இருந்தும் மோடி உருவத்தை பச்சை குத்தியதால் வாலிபருக்கு ராணுவ வேலை மறுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.


மத்திய பிரதேச மாநிலம் திகம்கார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சவுரப் பில்கையன் (23). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். ராணுவத்தில் சேர வேண்டும் என்பது இவரது நீண்ட கால ஆசை.


ஆனால் இவரது ஆசைக்கு பச்சைக்குத்தி இருந்தது தடையாக விழுந்தது. இவர் அப்படி என்ன பச்சை குத்தியிருந்தார் என்று கேட்கிறீர்களா? பிரதமர் மோடி உருவத்தைதான் இவர் பச்சை குத்தி இருந்தார்.


மோடியால் கவரப்பட்ட சவுரப் தனது மார்பில் மோடி உருவத்தையும், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உருவத்தையும் பச்சை குத்திக் கொண்டார். இந்நிலையில்தான் இவர் 2014-ம் ஆண்டு மராட்டிய மாநிலம் புனேயில் கராடி என்ற இடத்தில் நடந்த ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாமுக்கு சென்றார். அங்கு அவர் தேர்ச்சி பெறவில்லை.

சிவராஜ் சிங் சவுகான் 

சிவராஜ் சிங் சவுகான் க்கான பட முடிவு


இதேபோல் பலமுறை இவர் தேர்ச்சி பெறவில்லை. இதற்கு காரணம் மோடி உருவத்தை பச்சை குத்தியதுதான் என்று ராணுவ அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர்.


அனைத்து உடல் தகுதி தேர்விலும் வெற்றி பெற்றவர் கடைசியாக மார்பளவு எடுக்கும் போது அங்குள்ள மோடி உருவபச்சை காட்டிக் கொடுத்து விடுகிறது. இதனால் அவரது ராணுவத்தில் சேரும் ஆசை நிறைவேறவில்லை.


இதுகுறித்து சவுரப் கூறுகையில் எனக்கு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது ஆசை. ஆனால் பச்சை குத்தியிருந்தது இதற்கு தடையாகி உள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி, முதல்வர் சவுகான் ஆகியோரை நேரில் சந்தித்து கேட்க விரும்புகிறேன் என்றார்.



Find out more: