விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் தீக்குச்சி ஆலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 விருதுநகர் மாவட்டம் பெரிய வள்ளிகுளத்தில் உதயசங்கர் என்பவருக்கு சொந்தமாக தனியார் தீக்குச்சி ஆலை உள்ளது. இங்கு மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது.


 இதில் தீக்குச்சி மூட்டைகள் அனைத்தும் எரிந்தது சாம்பலானது. தகவலறிந்து விரைந்து வந்த 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தனியார் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு தீயை கடும் போராட்டத்திற்கு மத்தியில் அணைத்தன. இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்பு பொருட்கள் சேதமடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.



Find out more: