சென்னை:
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்கள் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்குங்க...


மத்திய மேற்கு வங்கக் கடலில், வடக்கு ஆந்திர கடற்கரைக்கு அப்பால், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வால் 2 நாட்களாக, தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களில், பரவலாக மழை பெய்தது.


வெப்பம் அதிகமாக இருந்த நேரத்தில் இந்த மழை மக்களை மகிழ்வித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலு பெறாவிட்டாலும், வங்கக் கடலின் தெற்கு பகுதியில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாம்.


இதனால் தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு, மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பெய்யட்டும்... பெய்யட்டும்... பூமி குளிரட்டும்.



Find out more: