சென்னை:
வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் மெட்ரோ ரெயிலுக்காக சுரங்கம் தோண்டும் பணி அக்டோபர் இறுதி அல்லது நவம்பரில் தொடங்கும் என்று சொல்லிட்டாங்க... சொல்லிட்டாங்க... 


யார் சொன்னாங்க என்று கேட்கிறீங்களா... ரயில்வே அதிகாரிகள்தாங்க... சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 வழித்தடங்களில் செயல்பட்டு வருகிறது. 


இந்நிலையில் மெட்ரோ ரெயில் முதல் திட்டப்பணி விரிவாக்கம் வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை நீட்டிக்கப்படுகிறது. ரூ. 3770 கோடி திட்டச்செலவில் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப் பாதை, உயர்மட்ட பாதை ஆகியவை அமைக்கப்போறாங்க...


இத்திட்டத்திற்கு முதல்வர் ஜெயலலிதா சமீபத்தல் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டம் 3 வருடத்தில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் வட சென்னையில் உள்ள அப்பகுதி மக்கள் வேறு இடத்திற்கு செல்ல ஆரம்பித்து விட்டனர். 


சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கி விட்டன. எந்திரம் மூலம் துளை போடும் பணிகள், துவாரம் அமைப்பது குறித்து முதற்கட்ட பணிகள் தொடங்கி விட்டன.

சுரங்கப்பாதை அமைக்கும் பணி க்கான பட முடிவு


இந்த வேலை முடிந்தவுடன் சுரங்கம் தோண்டும் பணி அக்டோபர் இறுதி அல்லது நவம்பரில் தொடங்கும் என்று மெட்ரோ ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Find out more: