சென்னை:
மர்மக்காய்ச்சல்... மர்மக்காய்ச்சல் திரும்பி பக்கமெல்லாம் காய்ச்சலால் மக்கள் அவதிப்படுவதால் அரசு நிர்வாகம் களமிறங்கி தேவையான பணிகளை முடுக்கி விட்டுள்ளது.


திருவள்ளூர் மாவட்டத்தில் திரும்பிய பக்கமெல்லாம் மர்மக் காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர். சுகாதாரத் துறை அதிகாரிகள் முகாமிட்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 


இந்நிலையில் மர்மக் காய்ச்சலுக்கு இதுவரை 4 பேர் வரை இறந்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு, கும்மிடிப்பூண்டி, ஈக்காடு ஆகிய தாலுகாக்களில் மர்மக் காய்ச்சல் பரவியுள்ளது.


ஆகஸ்ட் மாதத் தொடகத்தில் இந்த மர்மக் காய்ச்சல் பரவத் தொடங்கியது. மர்மக் காய்ச்சல் என்ன மாதிரியான காய்ச்சல் என்று அரசுத் தரப்பு இதுவரை விளக்கவில்லை. காய்ச்சலை குறைக்க தீவிர நடவடிக்கைகள் மட்டும் முடுக்கி விடப்பட்டுள்ளன. ப்ளீச்சிங் பவுடர் அடிப்பது, தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை அடையாளம் கண்டறிந்து அந்த இடத்தில் கொசுக்கள் அதிகரிக்காத வகையில் நடவடிக்கைகளை எடுப்பது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் மத்தியில் சற்றே அச்சம் குறைந்திருந்துள்ளது.


Find out more: