டோக்கியோ:
ஜப்பானை தாக்கிய லயன்ராக் புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் முதியோர் இல்லம் மூழ்கியதால் அங்கு தங்கியிருந்த 9 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


லயன்ராக் புயலால் ஜப்பான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் கனமழை பெய்ததால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழை, வெள்ளத்தால் ஜப்பானின் விமானம் மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. உணவுக்கு கூட மக்கள் திண்டாடும் நிலை உருவாகி உள்ளதாம்.


நாட்டின் வடக்கு பகுதிகளையும் வெள்ளம் மூழ்கடித்து வருகிறது. இதில் இவாய்சுமி நகரில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றை வெள்ளம் சூழ்ந்ததில் அங்கிருந்த 9 பேர் பலியானதாக ஜப்பான் போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


வெள்ளத்தில் கார்கள், வீடுகள் மூழ்கியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணியில் அரசு இறங்கியுள்ளது.



Find out more: