இந்தோனேசியா:
ஐயோ... போச்சே....ஐயோ... போச்சே என்று இளைஞர் ஒருவர் நம்ம ஊரு நடிகர் வடிவேலு பாணியில் புலம்பி வருகிறார்.
என்ன விஷயம்ன்னா... இந்தோனேசியாவில் உள்ளூர் உணவான டெத் நூடுல்ஸ் சாப்பிட்டதால், இளைஞரின் காது செவிடானது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
இந்தோனேசியாவின் உள்ளூர் உணவான டெத் நூடுல்ஸ், உலகின் மிக காரமான உணவாக திகழ்கிறது. இந்த நூடுல்ஸில் பேர்ட்ஸ் ஐ என்ற மிளகாயை விட 100 மடங்கு அதிகமான காரணம் கொண்ட மம்பஸ் என்ற மிளகாய் பயன்படுத்தப்படுகிறது. அப்போ... காரம் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்துக் கொள்ளுங்க...
மம்பஸ் என்றால் மரணம் என்று அர்த்தமாம்... அதனால் இந்த நூடில்ஸை டெத் நூடுல்ஸ் என்று பெயரிட்டுள்ளனர். இந்த நூடுல்லை சாப்பிடும் போட்டியும் நடந்து வருகிறது.
அப்படிதான் இந்த போட்டியில் கலந்துகொண்டு டெத் நூடுல்ஸை சாப்பிட்ட பிரிட்டன் சமையல்காரர் ஒருவர் காது கேட்கும் சக்தியை இழந்து தற்போது ஐயோ... போச்சே... போச்சே என்று புலம்பி வருகிறார்.