புதுடில்லி:
இந்திய எல்லையை ஒட்டிய திபெத் பகுதியில் சீனா ரகசிய போர் விமானத்தை நிறுத்தியுள்ளதாக வெளியான படங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகின் அதிக வலிமை வாய்ந்த சூப்பர்சோனிக் ஏவுகணையான பிரமோஸ் ஏவுகணைகளை சீன எல்லையில் சமீபத்தில் இந்தியா நிறுத்தியிருந்தது. இதை அறிந்த சீனா இதற்கு கடும் எதிர்ப்பை காட்டியது நினைவிருக்கலாம்.
இந்நிலையில் இந்தியாவின் அருணாச்சல பிரதேச எல்லையை ஒட்டி கிழக்கு பகுதியில், சீனாவின் தன்னாட்சிய பகுதியான திபெத் உள்ளது. இங்கு 14 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள டோஜங் யாடிங் விமான நிலையத்தில் ரகசிய போர் விமானத்தை சீனா நிறுத்தி வைத்துள்ளது என்பதுதான் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இந்த ரகசிய போர் விமானங்கள் குறித்த படங்கள், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகங்களின் இரண்டு இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இதுதான் தற்போது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.