கிருஷ்ணகிரி:
சுப்ரீம் கோர்ட் போட்ட உத்தரவு... கர்நாடகா செல்லும் பஸ்கள் பாதியில் நிறுத்தப்பட்டன.
காவிரியில் தமிழகத்திற்கு 10 நாட்கள் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி காண்பித்ததால்... கர்நாடகா செல்லும் தமிழக அரசு பஸ்கள் ஒசூருடன் நிறுத்தப்பட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கர்நாடகாவிலிருந்து தமிழகம் வரும் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.