இஸ்லாமாபாத்:
நிலநடுக்கம்... பள்ளி கட்டிடம் இடிந்து விழ... 57 மாணவர்கள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.


பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்திற்குட்பட்ட பல பகுதிகளில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியின் அடியில் சுமார் 37 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4.7 அலகுகளாக பதிவாகி இருந்தது.


இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள பட்டாகிராம் மாவட்டத்தில் ஒரு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி 57 மாணவர்கள் காயம் அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


Find out more: