போபால்:
அம்மா... அம்மா... ம.பியிலும் பரவுது அம்மா உணவகத்தின் பெருமை என்றுதான் சொல்ல வேண்டும். என்ன விஷயம் தெரியுங்களா?
குறைந்த விலையில் உணவு விற்பனை செய்யும் அம்மா உணவகம் தமிழகத்தில் செம வரவேற்பை பெற்றுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இந்த திட்டத்தை தற்போது ஆந்திரா மற்றும் ஒடிசாவிலும் பாலோ செய்து குறைந்த விலைக்கு உணவு வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தை தற்போது மத்திய பிரதேசத்திலும் தொடங்க அம்மாநில அரசு யோசித்து வருகிறதாம். சற்றே மாற்றத்துடன்... ரூ.10 க்கு சத்தான உணவு வழங்கும் திட்டத்தை துவக்க ம.பி., முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை போபாலில் அவர் விரைவில் வெளியிட இருக்கிறாராம். பண்டிட் தீனதயாள் உபாத்யாயின் பிறந்த தினம் வரும் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று இத்திட்டத்தை வெளியிட சிவராஜ்சிங் சவுகான் விரும்புவதாக தெரிகிறது. எப்படியோ... அம்மா உணவகம்.. இப்போ... ம.பி. வரையில் பரவிவிட்டது.
இத்திட்டத்திற்கு அன்னபூர்ணா யோஜனா என பெயரிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.