காத்மண்ட்:
வர்றாரு... வர்றாரு... நேபாள் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஷரன் மகத் 2 நாளில் இந்தியா வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
நேபாள நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஷாரன் மகத் இந்தியாவிற்கு வருகிறார். எதற்காக தெரியுங்களா? அந்நாட்டின் பிரதமர் பிரசந்தா இந்தியா வருகிறார். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக இவர் இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
நேபாளத்தில் பிரசந்தா தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றபின் பிரகாஷ் ஷாரன் மேற்கொள்ளும் முதல் பயணம் இது ஆகும். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பலருடன் பிரகாஷ் ஷாரன் ஆலோசனை நடத்துகிறார்.