பாரீஸ்:
சிக்கினர்... தவித்தனர்... இரவு முழுவதும் அங்கேயே சிரமப்பட்டனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


என்ன விஷயம் என்றால்... பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் பனிமலையில் கேபிள் கார்கள் பழுதடைய அதில் பயணம் செய்த 45 பேர் இரவு முழுவதும் அதில் சிக்கி தவித்த விஷயம்தான் அனைவரையும் வேதனையடைய வைத்துள்ளது.


ஐரோப்பாவில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உட்பட நாடுகளில் ஆல்ப்ஸ் பனிமலை உள்ளது. வெண்மை போர்வையை போர்த்தியது போன்று பனியால் போர்த்தப்பட்டிருக்கும் ஆல்ப்ஸ் மலையை காண...  பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். 


பிரான்சில் உள்ள மான்ட் பிளாங்க் ஆல்பஸ் பனிமலை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் கேபிள் காரில் போனாங்க... 12,468 அடி (3800 மீட்டர்) உயரத்தில் சென்ற கேபிள் காரில் அமர்ந்த படி ஆல்ப்ஸ் மலையின் அழகை பார்த்து ரசித்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.


அப்போது திடீரென கேபிள் கார்கள் பழுதடைய... அச்சத்தில் உறைந்து போய் விட்டனர் சுற்றுலாப்பயணிகள். இதில் 110 பேர் சிக்கி தவித்தனர். தகவல் அறிந்த இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த மீட்பு குழுவினர் 3 ஹெலிகாப்டர்களில் பறந்து கேபிள் கார்களில் சிக்கி தவித்த 65 பேரை பத்திரமாக மீட்டனர்.


இந்த மீட்பு பணிக்கே இரவாகி விட்டது. பனியும் அதிகளவில் கொட்ட தொடங்கியதால் மீட்புப்பணி நிறுத்தப்பட்டது. இதனால் 45 பேர் இரவு முழுவதும் கேபிள் கார்களிலேயே சிக்கி குளிரில் தவித்தனர். பின்னர் அவர்கள் மறுநாள் மீட்கப்பட்டனர். 


இச்சம்பவம் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Find out more: