பெங்களூரு:
கர்நாடகத்தில் போராட்டம் நடந்து வரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடாக அணைகளை துணை ராணுவத்தினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் நடந்து வரும் போராட்டம் மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. நேற்று நடந்த போராட்டத்தில் மாண்டியா மாவட்டத்தில் விவசாய சங்கத்தினர் டயர்களை தீ வைத்து எரித்தனர்.
மேலும் பெங்களூரு - மைசூரு சாலைகளில் ஆங்காங்கே சாலை மறியலும் நடந்தது. போராட்டத்தின் போது கண்ணீர் புகை வீசியதற்கு கண்டனம் தெரிவித்து விவசாயிகள் ஆர்பாட்டமும் நடத்தினர்.
இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் உள்ள ஆரங்கி, ஹேமாவதி, கபினி அணைகளை தங்களின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து துணை ராணுவ படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.