போபால்:
சிறுமியின் செயல் அனைவரையும் திரும்பி பார்க்க செய்துள்ளது. அப்படி என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா?


விஷயம் இதுதான். போபால் நகரில் உள்ள அரேரா குன்று அருகே குடிசைப்பகுதியில் வசிக்கும் சிறுமி முஸ்கான் அஹ்ரிவார் (9). மூன்றாம் வகுப்பு படிக்கும் இந்த சிறுமியின் அறிவு மிகுந்த விசாலமாக இருக்கிறது.


மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், வீட்டின் வாசலில் நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை வைத்து அப்பகுதியில் உள்ள எழுத்தறிவில்லாத குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். இந்த வயதில் இப்படி ஒரு நல்ல எண்ணமா என்று ஆச்சரியம் வருகிறதல்லவா!


அப்பகுதியில் உள்ள பிரபல பள்ளிக்கூடம் நன்கொடையாக கொடுத்த 25 புத்தகங்களை கொண்டு தனது வீட்டின் வாசலில் கடந்த ஆண்டு ஒரு சிறிய நூலகத்தை இந்த சிறுமி ஆரம்பித்தாள். பின்னர் அந்த புத்தகங்களில் உள்ள கதைகள் மற்றும் நமது நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை படிப்பறிவில்லாத அப்பகுதி குழந்தைகளுக்கு கற்பித்து வருகிறாள் இந்த சிறுமி. 


தற்போது நூற்றுக்கும் அதிகமான புத்தகங்கள் இவரிடம் சேர்ந்து விட்டது. இந்த புத்தகங்களை கட்டணமில்லாமல் மற்ற குழந்தைகளுக்கும் வழங்கி வருகிறாள் முஸ்கான். 


இந்த சிறுமியின்க ல்வித் தொண்டை பாராட்டி மத்திய அரசின் நிதி ஆயோக் திட்டத்தின்கீழ் விரைவில் 'சிந்தனை தலைவர்' பட்டம் வழங்கப்படவுள்ளது.


Find out more: